செய்திகள்

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்.

DIN

நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தனுஷின் - 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. விரைவில், படப்படிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

குபேராக்குப் பின் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷ் மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடிக்கிறாராம். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தை கிஷோர் (ஸ்ரீகாரம் இயக்குநர்) இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாத்தி, குபேரா படங்கள் நேரடியாக தெலுங்கு சினிமாவை மையமாகக் கொண்டவை என்பதால் தனுஷ் ஏன் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துகிறார் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT