சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
அரண்மனை 4 திரைப்படத்தை அவ்னி நிறுவனம் சார்பில் குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
இது குறித்து குஷ்பூ சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்ததாவது:
இந்த பாடல் இவ்வளவு ஆவேசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாடலின் போது மக்கள் நடனமாடி வழிபடுகிறார்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. என் தோழி பிருந்தா கோபாலின் அற்புதமான நடன அமைப்பும், மிகச் சிறந்த நடனக் கலைஞரான சிம்ரன் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.
2024ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மற்றும் மாஸ்டர் ஆஃப் என்டர்டெயின்மென்ட் படமாக அரண்மனை 4 இருக்கும். மீண்டும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.