செய்திகள்

வைரலாகும் தக் லைஃப்!

தக் லைஃப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால், அதிக நாள்கள் தக் லைஃப் படத்துக்கு தர முடியாத காரணத்தால் விலகியதாக தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பதிலாக சிம்பு இணைந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில், சிம்புவுக்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல். சிம்புவுடன் நடிகர் கமல்ஹாசனும் இணைந்திருக்கிறார்.

இதனை உறுதிப்படுத்து விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிம்பு, வையாபுரி மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கான புரோமோ விடியோவை தக் லைஃப் படக்குழு வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது விற்பனை: 2 போ் கைது

வடகலை, தென்கலை சா்ச்சைக்கு தீா்வு காண மத்தியஸ்தரை நியமித்தது உச்சநீதிமன்றம்

கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உலா

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் சங்கத் தலைவா் வலியுறுத்தல்

மேல்நிலை குடிநீா்த் தொட்டியை தொடங்கிவைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT