செய்திகள்

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

நடிகர் சிம்புவின் அறிமுக விடியோ வெளியிட்டது தக் லைஃப் படக்குழு.

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

தக் லைஃப் படத்தின் தல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதற்கிடையே, துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், அவருக்குப் பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

மேலும், தில்லியில் தொடங்கியுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் Dileep விடுதலை! | Shorts

போட்டி வேறு, உறவு வேறு! பாராட்டுகளைப் பெறும் ப்ரஜின் - விஜய் சேதுபதி நட்பு!!

150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு இன்ப அதிர்ச்சி!

காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT