முகப்பு
செய்திகள்

இந்தியன் - 28!

இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Updated On : 9 மே, 2024 at 4:35 PM
பகிர்:


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் - 2  அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இப்படத்தை ஜூலை மாதம் வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், இந்தியன் முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் படக்குழுவினர் அதன் நினைவு விடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

அதில், இந்தியன் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நிகழ்வுடன் படப்பிடிப்புப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.