DOTCOM
செய்திகள்

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் நேரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் நடிகர் தனுஷ். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘அடங்காத அசுரன்’ என்ற இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரீடம் தேவைப்படாத ராஜா! ஷாருக்கானை வாழ்த்திய கமல் ஹாசன்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கலையரசன்!

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்

“கரூர் சம்பவத்திற்கு ஒருவர்மட்டும் காரணமல்ல!” அஜித் கருத்துக்கு உதயநிதி பதில்! | TVK

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: 10 பயணிகள் காயம்

SCROLL FOR NEXT