செய்திகள்

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

சூர்யா - 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர், சூர்யா படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

பெண்களுக்கு முதலில் திருமணமா? வேலையா? - சமூக ஊடக கருத்துகளுக்கு உபாசனா பதில்!

அழகுச் சங்கமம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்!

SCROLL FOR NEXT