செய்திகள்

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகள் ஆகிறார் நடிகை அவள் சந்தியா.

DIN

பட்டமன்ற பேச்சாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்தவர் நடிகை அவள் சந்தியா. இவர் தொகுப்பாளர், விஜே, நகைச்சுவை பேச்சாளர் என பன்முகங்களை கொண்டவர்.

இவர் கண்மணி தொடர் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பத்தார். பின்னர் சத்யா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு, நளதமயந்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் தொடரில் நடித்துவருகிறார். இத்தொடரில் மெட்டி ஒலி தொடர் பிரபலம் நடனக் கலைஞர் சாந்தி மாமியார் பாத்திரத்தில் நடித்துவருகிறார். நடிகை அவள் சந்தியா, சாந்தியின் மருமகள் பாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில், அவள் சந்தியாவுக்கும் நடனக் கலைஞர் சாந்தியின் மகனான முரளி கிருஷ்ணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முரளி கிருஷ்ணா.

இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் அவள் சந்தியாவுக்கும், முரளி கிருஷ்ணாவுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சக்திவேல் தொடரில் சாந்தியின் மருமகளாக நடித்துவரும் அவள் சந்தியா, நிஜவாழ்கையிலும் மருமகளாகி இருக்கிறார்.

இவர்களுடைய திருமணம் உற்றார் உறவினர் முன்னிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT