பாடகி சுசித்ராவின் நேர்காணலொன்று திங்கள்கிழமை வெளியானது. அதில், தன் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து, இந்த நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவைக் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். முக்கியமாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
மே.15ஆம் தேதி அன்று ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது. அதில், கார்த்திக் குமார் தன் முன்னாள் மனைவி சுசித்ராவைக் கேள்விகேட்கும்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகக் கூறுகின்றனர். இதைப் பேசியது கார்த்திக்தான் என நேர்காணலில் பேசியவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கார்திக் குமார் ஏற்கனவே, “இது என் குரலும் வார்த்தைகளும் அல்ல. நான் இப்படியெல்லாம் பேசமாட்டேன்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளதாகவும் விரைவில் விசாரணை நடத்தப்படுமெனவும் க் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.