செய்திகள்

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பதிவினை பிரதமர் மோடி பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தலில் இதுவரை நான்கு கட்டமாக வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப் பதிவு மீதமுள்ளது. அதில் 164 தொகுதிகளுக்கு மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’, ‘அனிமல்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.

ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில் சமீபத்தில் விடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் , “இரண்டு மணி நேரப் பயணம் 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. யாராலும் நம்ப முடியாத விஷயம்! இது சாத்தியமாகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நவி மும்பை முதல் மும்பை வரை, கோவா முதல் மும்பை, பெங்களூரு முதல் மும்பை, பயணம் மிகவும் எளிதாகியுள்ளது. அற்புதமான உள்கட்டமைப்புகள் என்னை பெருமிதம் கொள்ள செய்கிறது. விழித்துக்கொள்ளுங்கள், முன்னேற்றதுக்காக வாக்களியுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விடியோவினை பிரதமர் மோடி பகிர்ந்து, “ மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறொன்றுமில்லை!“ எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT