கருடன் - நம்பிக்கையில் சூரி!
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன்.
இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
Advertisement
ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகுமென இன்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த சூரி, விடுதலை படத்தில் எப்படி வரவேற்பு கிடைத்ததோ அதேபோல் கருடன் திரைப்படமும் வெற்றியைத் தரும் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.