முகப்பு
செய்திகள்

ரூ.100 கோடி வசூலித்த அரண்மனை - 4!

அரண்மனை - 4 திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றுள்ளது.

Updated On : 22 மே, 2024 at 1:25 PM
பகிர்:

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016-ல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.

பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021-ல் ’அரண்மனை - 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ’அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மே.3 ஆம் தேதி இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 3ஆம் பாகத்திற்கு மேலானது என்கிற கருத்துகளையும் பெற்றது.

இந்த நிலையில், இப்படம் வெளியான 19 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, இந்தாண்டில் வெளியான தமிழ்ப் படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாகும். இது, ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →