விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்க போது யாரு, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இசை மற்றும் பாடல்கள் தொடர்புடைய கேள்விகள் இரு குழுக்களிடன் ஒவ்வொரு சுற்றுகளிலும் கேட்கப்படும். இதற்கு சரியான பதில் அளிக்குன் குழுவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில், ஸ்டார்ட் மியூசிக் 5-வது சீசனின் முதல் எபிசோடில் நடிகை சிம்ரன் பங்கேற்பாளராக கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பிரியமானவளே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் நாயகியாக நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் மகான், நம்பி விளைவு ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். சென்னையில், உணவகத் தொழிலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.