செய்திகள்

'ஈரமான ரோஜாவே' நாயகியின் புதிய தொடர்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

ஈரமான ரோஜாவே தொடர் நாயகியின் புதிய தொடர் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியல்லா. குழந்தை நட்சத்திரமாக அப்பா, 3, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அதில் பிரபலமடைந்து, சின்னத்திரையில் நுழைந்தார் கேப்ரியல்லா. இவர், ஈரமான ரோஜாவே தொடரின் 2ஆம் பாகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதேபோன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராகுல் ரவி. இவர் தொடர்ந்து சாக்லெட் தொடரில் நடித்திருந்தார். கரோனாவினால் இத்தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, கண்ணான கண்ணே தொடரில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் ராகுல். இத்தொடரில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இதனிடையே ராகுல் ரவியும், கேப்ரியல்லாவும் இணைந்து புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இத்தொடருக்கு மருமகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மருமகள் தொடரின் முன்னோட்டக் காட்சி (ப்ரோமோ) தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இத்தொடர் தொடங்கும் தேதி மற்றும் ஒளிபரப்ப்பு நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT