மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தான் சிகிச்சை எடுத்துவரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் 1990களில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன். மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் பெரும்பாலன ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிநிகேதியே, சாது மிராண்டா, நான் அவனில்லை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தனது சிறப்பான நடிப்புக்காக கேரள மாநில அரசின் விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார் ஸ்வேதா மேனன். தற்போது நாகேந்திரனின் ஹனிமூன் எனும் இணையத்தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்தத் தொடர் விரைவில் வெளியாகவிருக்கிறது.
சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்சியாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் சிகிச்சை எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. உங்களது அக்கறை எனக்கு முக்கியமானது. தற்போது நான் குணமடைந்து வருகிறேன்.
நீண்ட பயணத்தினால் எனது வலது தோல்பட்டை வலி ஏற்பட்டது. கழுத்தில் இருந்து வலது கை வரை பயங்கர வலி. கையை அசைக்கக்கூட முடியவில்லை.
தற்போது கவலையில்லை. சிறந்த பிசியோதெரபிஸ்ட்டிடம் சிகிச்சை எடுத்து வருகிறேன். பெரிய பிரச்னை ஆவதற்கு முன்பாக சிகிச்சை தொடங்குவது முக்கியம் என்பதை நினைவு கூறுகிறேன். இனிமேல் குணமடைதல், வலிமையடையும் நாள்களை நோக்கி காத்திருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.