செய்திகள்

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா - 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படுவதால் படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக, ‘புஷ்பா.. புஷ்பா’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இன்று படத்தின் இரண்டாம் பாடலான கபுள் சாங் (the couple song) பாடலை வெளியிட்டுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு தமிழில் விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் ஒத்திகை நடனத்தில் உருவாகியுள்ள கபுள் சாங் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் விவகாரம்... விளக்கமளித்த நடிகை மன்யா ஆனந்த்!

ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 272 பேர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

பிங்க் பியூட்டி... ரேஷ்மா பசுபுலேட்டி!

உங்களுக்கு எத்தனை புருஷன்? கமருதீனால் ஆத்திரமடைந்த விஜே பார்வதி!

தமிழகத்தில் முருகனுக்கு தேனும் தினையும் படைக்கிறோம்: பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT