நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யா - 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படக்குழு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்ச கம்பக்டீ இணைந்துள்ளார்கள். கேச்ச கம்பக்டீ துப்பாக்கி, ஜவான் படத்தில் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.