செய்திகள்

'வடக்கன்' படத்தின் புதிய பெயர் இதுதான்!

வடக்கன் படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்டன் மகன்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.

டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்துக்கு வடக்கன் எனப் பெயரிடப்பட்டது.

புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம், வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றிய கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

வடக்கன் என்கிற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததின் காரணமாக திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை எனவும், படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது இப்படத்திற்கு ‘ரயில்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது புகாா்

SCROLL FOR NEXT