செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' டீசர்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், ரோமியோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 

10 என்றதுக்குள்ள, கோலி சோடா படங்களின் மூலம் கவன்ம் பெற்றவர் இயக்குநர் விஜய் மில்டன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்சுரிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அச்சு ராஜாமணி - விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். டீசரில் விஜய் ஆண்டனி ஆக்‌ஷனில் கலக்கியிருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் தனியாா் மருத்துவமனை முற்றுகை

தில்லியில் 2 வெவ்வேறு இடங்களில் தீ விபத்து

தில்லி யமுனை நதியை சுத்தம் செய்வதில் ரூ.6,856 கோடி ஊழல்!

என்எல்சி நிகர லாபம் ரூ.1,564 கோடி!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சேவை: மாவட்ட ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT