செய்திகள்

நடிகை அஞ்சலியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாலகிருஷ்ணா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா திரைப்பட விழாவில் நடிகை அஞ்சலியிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

DIN

நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா தெலுங்கில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். இவர் ஆந்திரத்தில் முதலமைச்சராக இருந்த மறைந்த என். டி. ராமராவின் ஆறாவது மகனாவார்.

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா படமென்றாலே தனி ரசிகர்கள் உண்டு. காரணம், நம்ப முடியாத சண்டைக்காட்சிகளில் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் நடிப்பார் பாலகிருஷ்ணா.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப் படங்களாகின. ரசிகர்கள் இவரை செல்லமாக பாலய்யா என்றே அழைக்கின்றனர்.

அதேநேரம், பாலய்யா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். மொதுமேடைகளில் திடீரென ரசிகர்களை அதட்டுவது, புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கோவப்படுவது, சில நேரங்களில் கைகளைக் கூட ஓங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது பாலகிருஷ்ணா புதிய சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது, சிறப்பு விருந்தினராக வந்த பாலகிருஷ்ணா, மேடை ஏறியதும் நடிகை அஞ்சலியைத் தள்ளி நிற்கச் சொன்னார். அஞ்சலியும் நகர்ந்தார். ஆனால், திடீரென இன்னும் முன்னால் என அஞ்சலியைத் தள்ளிவிட்டார். ஒருகணம் தடுமாறிய அஞ்சலி, இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்தார்.

இருப்பினும், பொதுமேடையில் நடிகை ஒருவரின் மேலே கைவைத்து தள்ளிவிடுவது அநாகரிகமான செயல் என பாலகிருஷ்ணாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஏடிஜிபி தற்கொலை

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT