செய்திகள்

ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா..? வைரலாகும் டிடிஎஃப் வாசன் பேச்சு!

பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கைது செய்யும்போது பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎப் வாசனை மதுரை அண்ணா நகரில் போலீசார் இன்று கைது செய்தனர்.

கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமீன் கேட்டு விண்ணபத்துள்ளார் டிடிஎஃப் வாசன்.

மஞ்சள் வீரர் எனும் படத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் டிடிஎஃப் வாசனை கைது செய்யும்போது, “சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதானே. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை விட்டுவிடுகிறார்கள். ஒரு 23 வயது இளைஞர் தானாக வளரக் கூடாதா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு.. எல்லோரும் என்னை பார்த்துதான் கெட்டுப் போகிறார்களா..? யாரோட உயிருக்கு நான் பங்கம் விளைவித்தேன். நீதிமன்றத்தை மட்டுமெ நம்பியிருக்கிறேன்” எனப் பேசிக்கொண்டே செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT