இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாகுபலி.
பாகுபலி 2 பாகங்கள் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி அனிமேஷன் தொடராக மே 17 அன்று தெலுங்கில் வெளியானது. இதில் பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸின் முகம் சிஎஸ்கே அணியின் வீரர் முன்னாள் இந்திய கேப்டனுமான தோனியைப் போலவே இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்தத் தொடர் தற்போது தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இதனைப் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.