முகப்பு
செய்திகள்

ஓடிடியில் பிளாக், சட்டம் என் கையில்!

ஓடிடியில் வெளியானது பிளாக், சட்டம் என் கையில்...

Updated On : 1 நவம்பர் 2024, 11:39 am IST
பகிர்:

நடிகர் ஜீவாவின் பிளாக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் அக். 11 ஆம் தேதி வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா.

நீண்ட காலத்திற்குப் பின் ஜீவா, பிளாக் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார். கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஹாரராக உருவான இப்படத்திற்கு வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

தொடர்ந்து, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன. ரூ. 11 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அதேநேரம், நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் திரைப்படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த நிலையில், பிளாக் மற்றும் சட்டம் என் கையில் திரைப்படங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.