இயக்குநர் திருச்செல்வம் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

யூடியூப் சேனல் தொடங்கிய எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம்!

எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் யூடியூப் சேனல் தொடங்கிள்ளார்.

DIN

எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.

சேர் டிக்கெட் என்ற பெயரில் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ள திருச்செல்வம், இதில் தனது அனுபவங்களைப் பகிரவுள்ளார்.

வித்தியாசமான கருத்துகள் அடங்கிய காணொளிகள், குறுந்தொடர்கள், உரையாடல்கள், பிரபலங்களின் இயல்பான நேர்காணல்கள் எனப் பல புதிய முயற்சிகளை யூடியூப் பக்கத்தின் மூலமாகச் செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சின்ன திரையில் 20 ஆண்டுகள்

கோலங்கள் தொடரின் மூலம் சின்ன திரையில் இயக்குநராக அறிமுகமானவர் திருச்செல்வம். அத்தொடரில் தொல்காப்பியன் என்ற பாத்திரத்திலும் நடித்திருந்தார்.

கோலங்கள் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம் ஆகியத் தொடர்களை இயக்கினார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்திரம் பேசுதடி, கைராசிக்குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்களை இயக்கினார்.

மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கினார். இந்தத் தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை எந்தத் தொடரும் பெறாத சர்ச்சையையும் வரவேற்பையும் எதிர்நீச்சல் தொடர் பெற்றது. மேலும் சிறந்தத் தொடருக்கான விருதையும் எதிர்நீச்சல் வென்றது.

எதிர்நீச்சல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இயக்குநர் திருச்செல்வம் புதிதாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள திருச்செல்வம் தெரிவித்துள்ளதாவது,

'' சின்ன திரையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளேன். அதற்கு முன்பு திரைத் துறையில் தொழில்நுட்பக் கலைஞனாகவும் இருந்துள்ளேன். எனக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியவர்கள் தமிழ் மக்கள். உங்கள் ஆதரவே என்னைத் தூக்கிப் பிடித்தது.

உங்களுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

...எங்கள் ஊரில் சினிமா தியேட்டர்களில் மணலில் அமர்ந்து படம் பார்ப்போம். தரையில் அமர்ந்து படம் பார்ப்பவர்கள் அதிகம். அவர்கள் முழுக்க முழுக்க படத்தைக் கொண்டாடுபவர்களாக இருப்பர்.

பெஞ்ச் டிக்கெட்டில் இருப்பவர்கள் படத்தை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள். அதற்கு பின்புறம் நாற்காலியில் (சேர்) அமர்ந்திருப்பவர்கள் படத்தை நுணுக்கமாக கலைநோக்கத்தோடு பார்ப்பார்கள். அவர்கள் வாங்கும் டிக்கெட்டுக்கு சேர் டிக்கெட் என்று பெயர்.

அந்தப் பெயரில் புதிதாக யூடியூப் பக்கம் (சேனல்) தொடங்கியுள்ளோம். இதில் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை சுவாரசியமாகப் பகிர்வதுதான் இந்த பக்கத்தின் நோக்கம்.

வித்தியாசமான கருத்துகள், குறுந்தொடர்கள், உரையாடல்கள், பிரபலங்களின் இயல்பான நேர்காணல்கள் என பல விஷயங்களை இந்த யூடியூப் பக்கத்தில் வழங்கவுள்ளோம். இது புதிய பாதையை உருவாக்கும் என நம்புகிறேன்.

இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம், உணர்ச்சிகொள்வோம், உத்வேகம் கொள்வோம். இணைந்திருங்கள் சேர் டிக்கெட் சேனலுடன்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சின்ன திரையில் மிகவும் பிரபலமான தொடர்களை இயக்கிய திருச்செல்வம் தற்போது புதிதாக யூடியூப் பக்கத்தில் விடியோக்களை வழங்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருச்செல்வம் பெற்ற அங்கீகாரம்

கோலங்கள் தொடருக்காக சிறந்த சாதனையாளர் என்ற பிரிவில் தமிழக அரசின் சின்னத்திரை விருதை பெற்றார்.

சிறந்த நெடுந்தொடர் பிரிவில் கோலங்கள் தொடர் தமிழக அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதையும் வென்றது.

கோலங்களுக்காக சிறந்த சின்னத்திரை திரைக்கதைக்கான விருது கிடைத்தது.

மாதவி தொடருக்காக சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், என மூன்று பிரிவுகளில் திருச்செல்வத்துக்கு மைலாபூர் அகாடமி விருது வழங்கப்பட்டன.

எதிர்நீச்சல் தொடர், சிறந்த இயக்குநர், சிறந்த வசனம், சிறந்த நகைச்சுவை உள்ளிட்ட 6 பிரிவுகளில் சன் குடும்ப விருதுகளை வென்றது.

இதையும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து விலகுகிறேனா? உண்மை உடைத்த ராஜி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT