விஜய் - 69 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
விஜய் - 69 படப்பிடிப்பு அப்டேட்...
விஜய் 69-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: சிறுவனிடம் ஏமாந்த நிவேதா பெத்துராஜ்!
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக கேரள மாநிலம் பைய்யனூரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகளை எடுத்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் குத்து பாடலாக உருவாகியுள்ளதாம்.
இந்த நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.