ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான தேவரா கடந்த செப்.27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க: முகுந்த் வரதராஜனை பிராமணராக ஏன் காட்டவில்லை? இயக்குநர் விளக்கம்!
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றன. இப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், தேவரா திரைப்படம் வருகிற நவ. 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.