ஃபஹத் ஃபாசில், ரவி தேஜா. 
செய்திகள்

ஆவேஷம் ரீமேக்கில் ரவி தேஜா?

ஆவேஷம் தெலுங்கு ரீமேக் குறித்து...

DIN

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல்.

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும். ஓடிடியில் வெளியாகியும் பரவலான கவனத்தைப் பெற்றது.

தொடர்ந்து, இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகவும் நாயகனாக நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், பாலகிருஷ்ணா தன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவதால் ரீமேக்கில் நடிக்கவில்லையாம்.

இந்த நிலையில், நடிகர் ரவி தேஜா ஆவேஷம் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். இதற்கான, முதல் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT