செய்திகள்

அனுஷ்காவின் புதிய பட போஸ்டர்!

நடிகை அனுஷ்காவின் புதிய படம்...

DIN

நடிகை அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்கிறார். பாகுபலிக்குப் பின் சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இதற்கிடையே, தன் உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவைத் தயாரிப்பாளர்கள் மறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இறுதியாக, அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ந்து, அனுஷ்கா மலையாளப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தில், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தனார் என்கிற பாதிரியாரின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயசூரியாவும் களியங்காட்டு நீலி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவும் நடிப்பதாகக் கூறப்பட்டது.

தற்போது, இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்கான முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில், அனுஷ்கா ரத்தம் சிந்த சுருட்டு புகைப்பது போன்ற தோற்றம் ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT