நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கினார். அதன் கொள்கை மாநாட்டினை விக்ரவாண்டியில் மாபெரும் கூட்டத்தினை நடத்தி வெளியிட்டார்.
இந்த மாநாட்டுக்குப் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் யாரவது ஒருவர் தினமும் விஜய்யை விமர்சித்து வருவதை பார்க்க முடிகிறது.
திடீரென திமுக கட்சியினர் அஜித்தைப் புகழ்ந்து பேசுவதாக விஜய் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சத்யராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி அஜித்தை பாராட்டி பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அஜித் குறித்து சத்யராஜ் பேசியது?
தம்பி அஜித் குமார் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். பைக் டூர் பற்றி பேசியிருந்த அதில் சம்பந்தமே இல்லாத ஒரு மனிதன் மீது கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம்தான்.
அடுத்த நாட்டில் உள்ள யாரோ ஒருவரை வெறுக்க காரணம் எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது, ஆனால் மதம்தான் தேவையில்லாமல் ஒருவர்மீது வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார். அஜித்துக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விஜய் குறித்து பேசியதென்ன?
ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது சரி. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது. ஆரியம் திராவிடத்தை எதிர்க்கலாம். நாம் பேசுவது எல்லாம் சரியா என்பதை அறிய அவர்கள் கோபப்பட்டால் நீ பேசுவது சரி. ஆனால், அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பாக பேசுகிறாய் என்று அர்த்தம் என தெளிவாக தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் என்றார்.
திராவிடமும் தமிழ்த் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் பேசியிருந்ததும் அதற்கு சீமான் உள்பட பலர் விமர்சித்திருந்தார்கள். அதில் சீமான், “ஒன்று அந்தப் பக்கம் நில்லு, அல்லது இந்தப் பக்கம் நில்லு. நடுவில் நின்று அடிப்பட்டு சாகாதே”எனப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடிக்கிறார். விஜய் தனது கடைசி படமான விஜய் 69 படத்தில் நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.