'சலார் 2' படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தி்லும் நடித்திருந்தனர். சலார் திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. இப்படம் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், சலார் - 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை விரைவிலேயே துவங்க இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் பிரபாஸ் படத்தில் தென் கொரிய நடிகர் டான் லீ நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று உலா வந்தது. தற்போது அந்த தகவல் கிட்டதட்ட உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆம், தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் தனது இன்ஸ்டா பக்கத்தில் சலார் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, தம்ஸ் -அப் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் சலார் 2 பாகத்தில் தென்கொரிய நடிகர் நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டதாக பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.