நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மனம் திறந்துள்ளார்.
மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட நடிகை சமந்தா, தற்போது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். படப்பிடிப்பை தாண்டி பொது நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களிடம் எப்போதும் வைரல் நட்சத்திரமாகவே ஜொலிக்கிறார்.
இவர் நடிப்பில் உருவான சிட்டாடல் - ஹனி பனி இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: கிஷ்கிந்தா காண்டம் ஓடிடி தேதி!
இந்த நிலையில், இத்தொடருக்கான புரமோஷன் நிகழ்வில் பங்கேற்ற சமந்தா, “ஒரு பெண் தாயாக இருப்பது அழகான அனுபவம். பலரும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வயது ஒரு தடை கிடையாது. இன்னும் எனக்கு தாயாகும் விருப்பமிருக்கிறது. அதை எதிர்நோக்கியிருக்கிறேன். நானும் அம்மாவாக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இக்கருத்து ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டாடல் தொடரில் ஒரு குழந்தைக்கு தாயாக சமந்தா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.