செய்திகள்

அமரன் ஓடிடி தேதியில் மாற்றம்!

அமரன் ஓடிடி தேதியில் மாற்றம் ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது...

DIN

அமரன் திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் அதன் ஓடிடி வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் ரூ. 200 கோடி வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

இதற்கிடையே, அமரன் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் இம்மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தற்போது வரை படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பால் அமரன் ஓடிடி தேதியை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT