வா வாத்தியார் போஸ்டர்.  
செய்திகள்

வா வாத்தியார் டீசர்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் டீசர் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். 

இப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்துள்ளனர்.

இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இதன் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

1 நிமிடம் 38 விநாடிகள் கொண்ட வா வாத்தியர் படத்தின் டீசரை நவ.14 ஆம் தேதி கங்குவா வெளியாகும் திரையரங்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்

காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தனி வரிசை

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

SCROLL FOR NEXT