முகப்பு
செய்திகள்

அமரன் பட ஹே மின்னலே பாடல் விடியோ!

அமரன் படத்திலிருந்து ஹே மின்னலே பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 7:01 PM
ஹே மின்னலே பாடலில் இருந்து... (சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்) - படங்கள்: யூடியூப் / சரிகம தமிழ்,
பகிர்:

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் ரூ. 250 கோடி வசூல் படமாக சாதனை படைத்துள்ளது.

படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

Advertisement

தற்போது வரை படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பால் அமரன் ஓடிடி தேதியை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஹே மின்னலே பாடல் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் இன்ஸ்டாகிராமில் பலரும் ரீல்ஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கார்த்திக் நேதா எழுதியுள்ளார். ஹரிசரண், ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.