செய்திகள்

இணைந்து நடிக்கும் மம்மூட்டி, மோகன்லால்?

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிப்பதாகத் தகவல்...

DIN

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

தற்போது, மம்மூட்டி அவரின் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார். விநாயகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மோகன்லாலின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தையும் இவர்கள் இருவருமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவ.16 ஆம் தேதி இலங்கையில் துவங்கவுள்ளதாகவும் அப்படப்பிடிப்பில் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகவல்கள் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டியும் மோகன்லாலும் இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ’டிவெண்டி: 20’ என்கிற மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக நாளில் சாந்தி கோல்ட் பங்குகள் 15% உயர்வு!

பாயும் ஒளி... ராஷி சிங்!

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! பதைபதைக்கும் காணொலி | Himachal

SCROLL FOR NEXT