நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டதற்கு தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் ரசிகர்களிடம் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க: நயன்தாராவின் புதிய அவதாரம் - ராக்காயி டைட்டில் டீசர் வெளியீடு!
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
இதில், நானும் ரௌடிதான் படத்தின் 10 விநாடி நேரம் கொண்ட படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருந்த சூழலில், சம்பந்தப்பட்ட படத்தின் காட்சியை நெட்பிளிக்ஸ் பயன்படுத்தியுள்ளதால் தனுஷ் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.