கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில். 
செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கோவாவில் திருமணம்?

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து...

DIN

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது. பிறகு  விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னிணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். 

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 11 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்யவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா மக்கள் தொடர்பு ஆள்களும் (பிஆர்ஓ) இத்தகவலைப் பகிர்ந்து வருவதால் கீர்த்தி சுரேஷின் திருமணம் கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகவே தெரிகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT