செய்திகள்

இணையத்தில் கசிந்த விடாமுயற்சி பின்னணி இசை?

விடாமுயற்சியின் பின்னணி இசை....

DIN

விடாமுயற்சி பின்னணி இசை என இசையமைக்கும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் விடாமுயற்சி பின்னணி இசை என கீ போர்டில் இசையமைக்கும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் வேளையில் இந்த பின்னணி இசை அனிருத்தின் இசைக்குழுவிலிருந்த ஒருவர் பகிர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி - திரளான பக்தர்கள் தரிசனம்..!

SCROLL FOR NEXT