செய்திகள்

சொர்க்கவாசலுக்கு ‘ஏ’ சான்றிதழ்!

DIN

ஆர். ஜே. பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதைக்களம் 1999 ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடந்த சிறைக் கலவரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக, படத்தின் டீசர் வெளியாகி அதன் எடிட்டிங் பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறைக் கலவரக் காட்சிகள், சிறையில் நடக்கும் அதிகார சண்டைகள் என புதுப்பேட்டை, வடசென்னை பாணியில் எதார்த்தமான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கைத்துறை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT