வெற்றி மாறன் 
செய்திகள்

விடுதலை: 257 நாள்கள் படப்பிடிப்பு நடத்திய வெற்றி மாறன்!

விடுதலை - 2 குறித்து...

DIN

விடுதலை - 2 டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் படம் குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை - 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.26) சென்னையில் நடைபெற்றது.

இதில், வெற்றி மாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய வெற்றி மாறன், “விடுதலை திரைப்படம் 4 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. படம் ஆரம்பிக்கும்போது திருமணம் செய்தவர்களின் குழந்தைகளே பள்ளிகளுக்கு சென்றுகொண்டிருக்கும் நிகழ்வெல்லாம் நடந்துவிட்டது. நான் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ எல்லாமே படப்பிடிப்பில் கிடைத்தது. இப்பயணத்தில் சொந்த வாழ்க்கையிலும் நிறைய மாறியிருக்கிறேன்.

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பணிபுரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவரின் இசைத்திறனைப் பக்கத்திலிருந்து பார்ப்பது அற்புதமானது. பின்னணி இசையில் என்ன செய்யப்போகிறார் எனக் காத்திருக்கிறேன். நடிகர் விஜய் சேதுபதியை 8 நாள் நடிக்க அழைத்தேன். ஆனால், 110 நாள்கள் நடித்தார்.

விடுதலை இரண்டு பாகங்களும் சேர்த்து 257 நாள்கள் படப்பிடிப்பு செய்துள்ளோம். படப்பிடிப்பு இருக்கிறதோ இல்லையோ படத்துடன் நிறைய நடிகர்கள் பயணப்பட்டனர். இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. போதும் என நிறுத்திக்கொண்டேன். நடிகை மஞ்சு வாரியரும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இரண்டு அழகான பாடல்கள் இருக்கின்றன. படத்தின் துணை இயக்குநர்கள், துணை கலை இயக்குநர்கள் என பலரும் உருவாக்கத்தில் பெரிய பங்காற்றியுள்ளனர். என் குழுவினர் இல்லையென்றால் விடுதலை 1 மற்றும் 2 சாத்தியமாகியிருக்காது.” எனத் தெரிவித்தார்.

விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT