கேம் சேஞ்சர் இரண்டாவது பாடல்!
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 2-வது பாடல்...
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.
இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னதாக, தமன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் எழுதியுள்ளார். நகாஸ் ஆசிஸ் பாடியுள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக பாடல் எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.