நடிகை மீனா  படங்கள்: இன்ஸ்டா / மீனா
செய்திகள்

ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? வைரலாகும் மீனாவின் விடியோ!

விருது விழாவில் ஹிந்தி பேசமுடியாதென நடிகை மீனா பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DIN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 2022இல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மீனாவுக்கு நைனிகா (13) என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார். விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக மீனா த்ரிஷியம் 2, ப்ரோ டாடி படங்களில் நடித்திருந்தார். தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (ஐஐஎஃப்ஏ) சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அனிமல் படம் பல விருதுகளை வென்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை மீனாவிடம் ஹிந்தியில் பேசும்படி கேட்கப்பட்டது.

விருது விழாவில்...

அதற்கு நடிகை மீனா, “இது ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? நான் இது தென்னிந்திய விழா என நினைத்தேன். தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள்.

நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஐஃபா உர்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய சினிமாக்காரர்களையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது” என்று பேசினார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விவரம்:

சிறந்த படம்: அனிமல்,

சிறந்த இயக்குநர் : விது வினோத் சோப்ரா (டுவெல்த் பெயில்)

சிறந்த நடிகர் : ஷாருக் கான் (ஜவான்)

சிறந்த நடிகை - ராணி முகர்ஜி (மிர்ஸ் சட்டர்ஜி வெஸ்ஸஸ் நார்வே)

சிறந்த துணை நடிகர் - அனில் கபூர் (அனிமல்)

சிறந்த துணை நடிகை- ஷாபனா அஜ்மி (ராக்கி அர் ராணி)

சிறந்த வில்லன் - பாபி தியோல் (அனிமல்)

சிறந்த இசை - அனிமல் இசையமைப்பாளர்கள்

சிறந்த பின்னணி பாடகர் - புபேந்தர் பாபேல் (அனிமல் -அர்ஜுன் வேலி)

சிறந்த பாடல் - சத்துரங்கா (அனிமல்)

சிறந்த கதை - ராக்கி அர் ராணி

சிறந்த கதை (தழுவல்) - டுவெல்த் பெயில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டி, ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பிய இளைஞா் சேலம் ரயில் நிலையத்தில் கைது

உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

2-ஆவது வெற்றி: பிரக்ஞானந்தா இணை முன்னிலை

ஒசூரில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை: 4 போ் கைது; 5 போ் தலைமறைவு

ஒசூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் வகுப்பறைகள்: டாடா நிறுவனம் உதவி

SCROLL FOR NEXT