தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.
ஹிந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. மேலும் ஹிந்தியில் ஒரு இணையத்தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்
ஜோதிகா சூர்யாவுக்கு 2006இல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் இருக்கிறார்கள்.
இதில் தியா சூர்யா தனது பள்ளியில் நடக்கும் போட்டிக்காக ஆவணப்படம் ஒன்றினை எடுத்து விருது பெற்றுள்ளார்.
இது குறித்து ஜோதிகா தனது பதிவில் கூறியதாவது:
சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆவணப்படமாக எடுத்ததுக்கு பெருமைப்படுகிறேன் தியா. இதுமாதிரி தொடர்ந்து செயல்படு. இந்தமாதிரி விஷயங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியதுக்கு மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.
சிறந்த படமாக தியா இயக்கிய லீடிங் லைட் படம் தேர்வாகியுள்ளது. மேலும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருதும் தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சான்றிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் கங்குவா விரைவில் வெளியாகவிருக்கிறது. ஜோதிகாவின் புதிய ஹிந்தி படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.