செய்திகள்

காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை: சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை...

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கனா, வாழ், டாக்டர், கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வணிக ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில், எஸ்கே புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “எங்கள் சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை.

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 250 பேர் பலி?

பஞ்சாபில் வெள்ளம்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு செப். 3 வரை விடுமுறை

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT