ஓடிடியில் போகுமிடம் வெகுதூரமில்லை!
போகுமிடம் வெகுதூரமில்லை ஓடிடியில்...
நடிகர் விமலின் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இப்படத்தில் கருணாஸ், நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலிலிருந்து விலகிய நடிகர்கள்!
Advertisement
கடந்த ஆக. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. வாழை படத்தின் பெரிய வெற்றியால், இப்படம் வணிக ரீதியான இறக்கத்தை சந்தித்தது.
இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.