செய்திகள்

கங்குவா: பிறமொழிகளில் சூர்யாவின் ஏஐ குரல்!

கங்குவா அப்டேட்...

DIN


கங்குவா திரைப்படத்தின் பிறமொழி பதிப்பிற்கும் சூர்யாவின் குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பின், வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டால், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக். 20 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகத் தகவல்.

இதையும் படிக்க: ஸ்ரீதேவி பெயரில் வீதி!

இந்த நிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக, தமிழ் நடிகர்களின் படங்கள் பிறமொழிகளில் வெளியாகும்போது அம்மொழி தெரிந்த டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பார்கள். தற்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவரின் குரலை அசலாக இன்னொரு மொழிக்கு டப்பிங் செய்ய முடிகிறது.

இதனால், கங்குவா படக்குழு சூர்யாவின் குரலே மற்ற மொழிகளிலும் இருக்கட்டும் என முடிவு செய்து அதை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

காலாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகள் திறப்பு

திசை தெரியாமல் பயணிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! பலர் மாயம்

SCROLL FOR NEXT