செய்திகள்

வேட்டையன்: மழையால் வெறிச்சோடிய திரையரங்குகள்!

மழையால் பாதிக்கப்பட்ட வேட்டையன்...

DIN

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் வேட்டையன் படத்தின் திரையரங்க வணிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது.

முதல் நாளில் இந்தியளவில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஜெயிலரின் முதல் நாள் வசூலான ரூ.48 கோடியை முறியடிக்கவில்லை. இருந்தாலும், நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை, கோவை உள்பட சில மாவட்டங்களில் நேற்று (அக்.13) கனமழை பெய்ததால் அங்குள்ள திரையரங்குகளுக்குச் செல்வதை ரசிகர்கள் தவிர்த்துள்ளனர்.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல திரைகளில் வேட்டையன் திரையிடப்பட்டும் டிக்கெட் முன்பதிவுகள் வெறிச்சோடியபடி இருக்கின்றன.

மழையால், வேட்டையன் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பது தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT