முகப்பு
செய்திகள்

ரிவால்வர் ரீட்டா டீசர்!

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:19 PM
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.

தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ரிவால்வர் ரீட்டா'.  கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடிக்கிறார்.

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கதைநாயகியாக ரகு தாத்தா படத்தில் சரிவைக் கண்டதால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

முழு கட்டுரையைப் படிக்க →