நடிகை ராதிகா ஆப்தே படங்கள்: இன்ஸ்டா / ராதிகா ஆப்தே
செய்திகள்

தாயாகப்போகும் ராதிகா ஆப்தே..! திரைப்பட விழாவில் அறிவிப்பு!

நடிகை ராதிகா ஆப்தே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

DIN

நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருக்கு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் தமிழை விட அதிகமான படங்களில் நடித்து வருகிறார். 

ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர்.

துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார். 

ராதிகா ஆப்தேவின் சிறப்பு

ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்காக நடிப்பை கைவிடப்போவதில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

தங்களை இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்ததும் சர்ச்சையானது.

‘மேட் இன் ஹெவன் 2’ தொடரில் தலித் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது 2 புதிய ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடாமல் இருந்த ராதிகா ஆப்தே தற்போது தனது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ராதிகா ஆப்தே நடித்திருக்கும் சிஸ்டர் மிட்நைட் எனும் படம் லண்டனில் நடைபெறும் பிஎஃப்ஐ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கரன் காந்தாரி இயக்கியுள்ளார்.

இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களைத்தான் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தப்படம் கேன்ஸ் சர்வதேச விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராதிகா ஆப்தேவின் கணவர் யார்?

வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012இல் திருமணம் செய்தார். 2011இல் லண்டனில் நடனம கற்க சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2012இல் இருந்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

கணவருடன் ராதிகா ஆப்தே.

சமீபத்தில் ராதிகா ஆப்தே லண்டனில் குடியேறியதாகவும் தகவல் வந்தது. லண்டன், மும்பை என்று படங்களுக்காக ராதிகா ஆப்தே அலைந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல்முறையாக தாயாகப்போகிறார் என்பதை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT