நான் சாய் பல்லவியின் ரசிகன்: மணிரத்னம்
அமரன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசியவை...
இயக்குநர் மணிரத்னம் நடிகை சாய் பல்லவி குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்.18) நடைபெற்றது.
நிகழ்வில், இயக்குநர் மணிரத்னம் கலந்துகொண்டு பேசினார். அதில், “சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்து ஆக்சனுக்குள் நுழைந்து விரைவான வளர்ச்சியை அடைவதுபோல் தெரியும். ஆனால், சிவகார்த்திகேயன் படிப்படியாக மேலே வந்தவர். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அமரன் படத்தில் புது அவதாரமாகத்தான் தெரிகிறார். நிஜ கதைகளை இயக்குவது மிகவும் கடினமானது. கவனமாக இருக்க வேண்டும். நடிகை சாய் பல்லவி சிறந்த நடிகை. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் உண்மையாக நடிப்பார். நான் அவரின் ரசிகன். விரைவில், சாய் பல்லவியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அண்ணா என்றழைத்த சாய் பல்லவி..! கடுப்பான சிவகார்த்திகேயன்!
இதைக்கேட்டுக் கொண்டிருந்த சாய் பல்லவி, வெட்கத்தில் முகத்தை தலையைத் தாழ்த்தி மகிழ்ச்சி அடைந்தார். பின், அவர் பேசும்போது, “இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என நினைத்திருந்தேன். ஆனால், அவர் என்னைப் பற்றி சொன்ன வார்த்தைகள் இனம் புரியாத ஆனந்தத்தைத் தருகிறது. கண்டிப்பாக, அவருடன் இணைந்து பணியாற்றுவேன்” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.